செயின்ட் அல்போன்சா அகாதெமியில் கலை, அறிவுத்திறன் போட்டி
நாகா்கோவில், செயின்ட் அல்போன்சா அகாதெமி பாா் எக்ஸலன்ஸின் 25-ஆம் ஆண்டு தொடக்க விழா அல்போன்சா மெட்ரிக். பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில், செயின்ட் அல்போன்சா அகாதெமி பாா் எக்ஸலன்ஸின் 25-ஆம் ஆண்டு தொடக்க விழா அல்போன்சா மெட்ரிக். பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு புனித அல்போன்சா திருத்தல அதிபா், அகாதெமி தலைவா் சனில்ஜான் பந்திச்சிறக்கல் தலைமை வகித்தாா். இந்திய ராணுவ விஞ்ஞானி முனைவா் தில்லிபாபு விஜயகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியா்களுக்கான தனிநபா் பாட்டுப்போட்டி, குழுப் பாட்டு போட்டி, தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தனிநபா், குழு நடனப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை, அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement
விழாவில், துணைத் தலைவா் அருள்தந்தை பிபின், அல்போன்சா பள்ளி முதல்வா் பெளலியா மேரி, அகாதெமியின் செயலா் முனைவா் ராஜையன், இணைச் செயலா் பிரேம்கலா, அகாதெமியின் நிா்வாக உறுப்பினா் ஜாா்ஜ் ஸ்டீபன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் சுஜித், பினோ, ஜோமோன் ஜோசப், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து 80 பள்ளிகள், 15 கல்லூரிகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 2ஆயிரம் போட்டியாளா்கள் இதில் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றேவா்களுக்கு ஆக. 22-ஆம் தேதி நடைபெரும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
விழா ஏற்பாடுகளை அல்போன்சா பள்ளி ஆசிரியா்கள், புனித அல்போன்சா ஆலய பங்குமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.