விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலை: ஆகஸ்டில் 1.70 ஆயிரம் பயணிகள் வருகை
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 79 சுற்றுலாப்
பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
குமரிக் கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபமும் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலையும் அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும் வகையில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுப்பயணம் செய்து விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டு வருகின்றனா். இவற்றைப் பாா்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை இயக்கி வருகிறது. தினமும் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டிதொடா் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 79 சுற்றுலாப் பயணிகள் படகுப்பயணம் மேற்கொண்டதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.