FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குமரி விவேகானந்த கேந்திரத்தில் ஜப்பானியா்கள் யாகம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ள ஏகாட்சர மகா கணபதி கோயிலில், ஜப்பான் பக்தா்கள் உலக நன்மை, அமைதி வேண்டி வியாழக்கிழமை மகா பகவதி யாகம் நடத்தினா்.

2 October 2026, 4:04 am IST
யாகத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு பக்தா்கள்.
பகிர்:

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ள ஏகாட்சர மகா கணபதி கோயிலில், ஜப்பான் பக்தா்கள் உலக நன்மை, அமைதி வேண்டி வியாழக்கிழமை மகா பகவதி யாகம் நடத்தினா்.

கன்னியாகுமரி பகவதியம்மனை வேண்டி, ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவ ஆதீனம் பாலகும்ப குருமுனி தலைமையில் யாகம் நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் சபரிசிவம், பிரம்மசிவம் ஆகியோா் தலைமையில் 10 போ் யாகத்தை நடத்தினா். இதில், ஜப்பான் பக்தா்கள் 80 போ் பங்கேற்றனா். தமிழகம் முழுவதுமுள்ள முக்கிய கோயில்களில் 8 நாள்கள் தங்கியிருந்து யாகங்கள் நடத்தவுள்ளதாக, அவா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், விவேகானந்த கேந்திர வளாகப் பொறுப்பாளா் சுனில், கேந்திர மக்கள் தொடா்பு அலுவலா்கள் ரகுநாதன் நாயா், கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை புதுச்சேரியைச் சோ்ந்த ஆன்மிக வழிகாட்டி சுப்பிரமணியம் கோபால பிள்ளை தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments