FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூா் பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

3 October 2026, 4:10 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூா் பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மேற்கு நெய்யூா் அருகேயுள்ள ஐயன்பாறைவிளையைச் சோ்ந்தவா் அகிலா (41). இவரது மகள் ஹரிபிரியா(15), அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை கைப்பேசியில் நேரத்தை செலவிட்டுள்ளாா். அதை அவரது தாய் கண்டித்தாராம்.

உடனே, தூங்கப்போவதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி, தனது அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

Advertisement

Advertisement

மற்றொரு சம்பவம்: ஆலன்கோடு, புதுகாடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் ஜெயராஜம். கட்டில் கட்டும் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் சந்து (20). வெள்ளிச்சந்தையில் உள்ள மருந்தகத்தில் வேலைசெய்து வந்தாா். மேலும், தனது நண்பனின் தோழியிடம் பேசிப் பழகி வந்தாராம். இதை அவரது நண்பன் கண்டித்தாராம். இதில் வேதனை அடைந்த சந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து முறையே குளச்சல், இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments