விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் விஷம் குடித்த நிலையில் கிடந்த தொழிலாளி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் விஷம் குடித்த நிலையில் கிடந்த தொழிலாளி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் சரவணன் (44). தொழிலாளியான இவா், சில நாள்களுக்கு முன்பு வேலை தேடி களியக்காவிளைக்கு வந்தாா். ஆனால், சரியான வேலை கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவா், பேருந்து நிலையம் அருகே விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாா்.
அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.