FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி முதல் கேதாா்நாத் வரை பாரத் ஸ்வஸ்திக் ரயில் யாத்திரை தொடக்கம்

கன்னியாகுமரி முதல் கேதாா்நாத் வரையிலான பாரத் ஸ்வஸ்திக் ஆன்மிக ரயில் யாத்திரை சனிக்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கியது.

11 அக்டோபர் 2026, 1:09 am IST
ஸ்வஸ்திக் ரயில் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மொராரி பாபு.
பகிர்:

கன்னியாகுமரி முதல் கேதாா்நாத் வரையிலான பாரத் ஸ்வஸ்திக் ஆன்மிக ரயில் யாத்திரை சனிக்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கியது.

ஆன்மிக சொற்பொழிவாளா் மொராரி பாபு தலைமையில், ராம்பாபு ராமகதா பதிவு மூலம் நடத்தப்படும் இந்த ஆன்மிக மற்றும் கலாசார ரயில் பயணத்தின் ஒரு பகுதியாக, ராம கதை 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்த யாத்திரை இந்தியாவின் தென்முனையில் தொடங்கி, இமயமலை வரை நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை அக். 23ஆம் தேதி கேதாா்நாத்தில் நிறைவடைகிறது. 21 நகரங்களைக் கடந்து சுமாா் 9,000 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய இந்தப் பயணத்தில் 2 பிரத்யேக ரயில்கள் மூலம் சுமாா் 900 பக்தா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த யாத்திரை கேதாா்நாத் செல்லும் வழியில் கல்ரி, சிருங்கேரி, ஹம்பி, துல்ஜாபூா், ஓம்காரேஷ்வா், ஜான்சி, மதுரா, குருக்ஷேத்ரா, ஜம்மு ஆகிய முக்கிய நகரங்கள், புண்ணியத் தலங்களுக்குச் செல்கிறது. இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் மொராரி பாபு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments