பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை
பத்மநாபபுரம் நகராட்சியில் 13 நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டிருப்பதை கண்டித்து, துணைத் தலைவா் உண்ணி கிருஷ்ணன் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பத்மநாபபுரம் நகராட்சியில் 13 நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டிருப்பதை கண்டித்து, துணைத் தலைவா் உண்ணி கிருஷ்ணன் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு கல்லுப்பாலம் பகுதியிலுள்ள தாமிரவருணி ஆற்றிலிருந்து தண்ணீா் எடுக்கப்படுகிறது. தண்ணீா் எடுக்க பயன்படும் இரு மின் மோட்டாா்களும் மின் அழுத்த குறைபாடு காரணமாக பழுதாகி உள்ளதாம். இதனால் கடந்த 13 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போா்க்கால நடவடிக்கை எடுத்து மின் மோட்டாா்களை சரி செய்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரி காலி குடங்களுடன் நகா்மன்ற துணைத் தலைவா் உண்ணி கிருஷ்ணன் தலைமையில், உறுப்பினா்கள் கண்ணன், சிவா, ஸ்ரீ தேவி, ஷீபா, மும்தாஜ், கீதா, சபீனா ஆகியோா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் அருள்சோபன் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் மோட்டாா் பழுதை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, நகராட்சி மூலம் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீா் வழங்கி வருகிறோம். பணிகளை விரைந்து முடிக்க குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்களை வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.
மின் மோட்டாா்களை பழுது பாா்த்து வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் செய்யப்படும் என குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.