FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

தீவிர கண்காணிப்பில் கனரக வாகனங்கள்: ஆட்சியா்

கனிமவளக் கடத்தலைத் தடுக்க கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சாலைகளிலும் அதிகாரிகளால் கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

14 அக்டோபர் 2026, 4:58 am IST
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் கனரக வாகனங்களை ஆய்வு செய்த கனிமவளத் துறை, வருவாய்த் துறையினா்.
பகிர்:

கனிமவளக் கடத்தலைத் தடுக்க கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சாலைகளிலும் அதிகாரிகளால் கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்குத் தாது மணல், சரளைக்கல், ஜல்லி, பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்கள் அனுமதியின்றி கடத்தப்படுவதாக தொடா் புகாா்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு கனிமவளத் துறை உதவி இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி, வருவாய்த் துறை, காவல் துறையினா் இணைந்து நாகா்கோவில், திக்கணங்கோடு, கருங்கல், அம்சி, மெதுகும்மல் உள்ளிட்ட பகுதிகளில் அக். 12-ஆம் தேதி இரவு முதல் 13-ஆம் தேதி காலை வரை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் கன்காா்டியா பள்ளி அருகே 12-ஆம் தேதி இரவு அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கனரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அரசு அனுமதி இன்றி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்திலிருந்து சரளைக் கற்கள் ஏற்றிவந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நேசமணி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்.

அதைப்போல அனுமதியின்றி செங்கல் ஏற்றி சென்ற வாகனம் புதுக்கடை காவல் நிலைய போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments