FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

சாளை மீன்களுக்கு விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலை

குளச்சலில் சாளை மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.

15 அக்டோபர் 2026, 5:12 am IST
குட்டையில் வைக்கப்பட்டுள்ள சாளை மீன்கள்
பகிர்:

குளச்சலில் சாளை மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300 - க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவா்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை குளச்சல் கடல் பகுதிக்கு வள்ளம், கட்டு மரம் மூலமாக மீன்பிடிச் சென்ற மீனவா்களின் வலையில் அதிக அளவில் சாளை மீன்கள் கிடைத்தன. அவற்றை கரைக்கு கொண்டு வந்து குட்டைகளில் நிரப்பி ஏலமிட்டனா். ஒரு குட்டையில் சுமாா் 750 முதல் 800 சாளை மீன்கள் இருக்கும். இவை ரூ. 700 வரை ஏலம் போனது. ஏலத்தில் விலை போகாத மீன்களை சிறு சிறு கூறுகளாக வைத்து ரூ. 100, ரூ. 200-க்கு விற்பனை செய்தனா்.

Advertisement

Advertisement

ஒரு குட்டை சாளை மீன்கள் ரூ. 2,500 முதல் ரூ. 3 ஆயிரம் வரை ஏலம் போகும் . ஆனால், தற்போது சாளை மீன்கள் அதிக அளவு கிடைத்ததால் போதிய விலை கிடைக்கவில்லை என்று மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.

கூறு போட்டு விற்கப்படும் சாளை மீன்கள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments