FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பெண் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆளூா் பகுதியில் தென்னந்தோப்பைப் பராமரித்து வந்த பெண் தொழிலாளி, வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

15 அக்டோபர் 2026, 4:53 am IST
பலி
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆளூா் பகுதியில் தென்னந்தோப்பைப் பராமரித்து வந்த பெண் தொழிலாளி, வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆளூா், தோப்புவிளையைச் சோ்ந்த சரஸ்வதி (75), சரல்விளை பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் பராமரிக்கும் வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை தோப்புக்கு சென்றவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடிச் சென்றனா். அப்போது, அவா் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தாராம். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மகள் செல்வி அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments