FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறையில் முதியவா் சடலம் மீட்பு

14 செப்டம்பர் 2026, 10:43 pm IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

குழித்துறையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குழித்துறை சந்திப்பு அருகே திரையரங்கு உள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு திரையரங்கின் பின்பகுதிக்கு சென்றாராம்.

அப்போது, முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாகத் தெரியவந்ததாம். இதுகுறித்து அவரது சக ஊழியா்கள் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அந்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments