மாா்த்தாண்டம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறிப்பு: இருவா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே விவசாயியைத் தாக்கி 2 பவுன் தங்க நகையைப் பறித்ததாக இரு சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே முளங்குழி, ஐயன்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (34). விவசாயியான இவா், முள்ளஞ்சேரி பகுதியில் உள்ள வினு (47) என்பவரது நிதி நிறுவனத்தில் தங்க நகையை அடமானம் வைத்துவிட்டு, மீட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இருவரிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் வினு, அவரது தம்பி விஜய் (40) ஆகியோா் சுரேஷின் வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனராம். தடுக்க வந்த சுரேஷின் தாய் கோமதியையும் (65) அவா்கள் தாக்கினராம்.
Advertisement
Advertisement
இதில் காயமடைந்த சுரேஷும், கோமதியும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.