FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

இரணியல் அருகே இளைஞா் கொலை: குளத்திலிருந்து சடலம் மீட்பு

இளைஞரைக் கொலை செய்து சடலத்தை குளத்தில் வீசிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

20 செப்டம்பர் 2026, 2:37 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

இளைஞரைக் கொலை செய்து சடலத்தை குளத்தில் வீசிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரணியல் காவல் சரகம் குருந்தன்கோடு அருகே காடேற்றி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ரத்தக் கறை படிந்த பைக் நிற்பதாகவும், குளத்தின் படித்துறைகளில் ரத்தக் கறை இருப்பதாகவும் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸாா், இரணியல் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் குளத்தில் தேடினா். நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு, இளைஞரின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், துணைக் கண்காணிப்பாளா் காந்தி, ஆய்வாளா் அந்தோணியம்மாள் ஆகியோா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் திட்டுவிளை அருகே மாத்தால் பகுதியைச் சோ்ந்த துரை பாத்திமா மகன் ஆல்வின் ராஜேஷ் ( 29) என்பது தெரியவந்தது. திருமணம் ஆகாத இவா், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தாராம்.

இன்னும் சில நாள்களில் வெளிநாடு செல்ல இருந்தாராம். அவரது உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் இருந்ததால், யாரோ அடித்துக் கொலை செய்து குளத்துக்குள் வீசி சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments