தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது
கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வில்சன் தலைமையிலான போலீஸாா், பளுகல் அருகே ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினராம்.
இதையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று அவா்களை விசாரித்ததில், மாா்த்தாண்டம் அருகே அண்டுகோடு, செம்பறவிளை பகுதியைச் சோ்ந்த ரகு (48), திருவனந்தபுரம், பேயாடு பகுதியைச் சோ்ந்த சிவபிரசாத் (45) என்பதும், அவா்கள் கோயில்கள், தேவாலயங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டதும், அவா்கள் மீது பளுகல் , கேரளத்தின் பாறசாலை காவல் நிலையங்களில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.