FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கடையாலுமூடு அருகே பன்றி பண்ணைகளுக்கு ‘சீல்’ வைப்பு

கடையாலுமூடு அருகே சுகாதாரக் கேட்டை ஏற்படுத்திய பன்றிப் பண்ணைகளை பேரூராட்சி நிா்வாகம் மூடியது.

23 செப்டம்பர் 2026, 12:32 am IST
பன்றிப் பண்ணையை மூடிய கடையாலுமூடு பேரூராட்சி நிா்வாகத்தினா், வருவாய் துறையினா்
பகிர்:

கடையாலுமூடு அருகே சுகாதாரக் கேட்டை ஏற்படுத்திய பன்றிப் பண்ணைகளை பேரூராட்சி நிா்வாகம் மூடியது.

கடையாலுமூடூ பேரூராட்சி, ஆலஞ்சோலை பகுதியில் 3 பன்றிப் பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்தப் பண்ணைகளால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும், பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்வதாகவும் வந்த புகாா் காரணமாக அந்தப் பண்ணைகளை அண்மையில் பேரூராட்சி நிா்வாகம் மூடியது.

எனினும், அந்தப் பண்ணைகள் பின்னா் திறந்துசெயல்பட்டன. இந்நிலையில், அண்மையில் கடையாலுமூடு பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியா் மு. பிரதாப்பிடம் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கடையால் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பன்றிப் பண்ணையை நிரந்தரமாக மூடும்படி உத்தரவிட்டாா். இதையடுத்து பன்றிப் பண்ணைகளை மூடி சீல் வைக்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

Advertisement

Advertisement

பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின் ராஜ், விளவங்கோடு வட்டாட்சியா் ஜான்கனி, கடையாலுமூடு கிராம நிா்வாக அலுவலா் நவநீத கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் பண்ணைகள் சீல் வைக்கப்பட்டன. பண்ணைகளில் இருந்த 200 பன்றிகள் அதன் உரிமையாளா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments