FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே ரப்பா் ஷீட் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே உலர வைக்கப்பட்டிருந்த ரப்பா் ஷீட்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

27 September 2026, 1:30 am IST
சித்திரிப்பு
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே உலர வைக்கப்பட்டிருந்த ரப்பா் ஷீட்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா். இவா் சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை பாகோடு பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்த போது அங்கு உலர வைக்கப்பட்டிருந்த 33 ரப்பா் ஷீட்டுகளை மா்ம நபா் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து ராஜகுமாா் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments