FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் திறப்பு: ரூ. 1 லட்சம் வசூல்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 165 காணிக்கை வசூலானது.

பகவதியம்மன் கோயில் . - பிரதிப்படம்.
பகிர்:

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 165 காணிக்கை வசூலானது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தா்களும் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இங்கு வரும் பக்தா்களுக்கு தினமும் நண்பகல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதான திட்டம் பக்தா்களின் நன்கொடை, கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் வருவாய் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி செப்டம்பா் மாதத்துக்கான அன்னதான உண்டியல் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டது. நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஜெயசுதா தலைமையில் பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சுஜித் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 165 வசூலானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments