தென்காசி மாவட்டத்தில் 3 நாள்களுக்கு தடை உத்தரவு
தென்காசி மாவட்டத்தில், ஆக. 18 முதல் 21 ஆம் தேதி வரை தடை உத்தரவு விதித்து ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.
தென்காசி மாவட்டத்தில், ஆக. 18 முதல் 21 ஆம் தேதி வரை தடை உத்தரவு விதித்து ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிவகிரி வட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், மஜரா பச்சேரியில் ஆக. 20 ஆம் தேதி ஒண்டிவீரன் 255-ஆவது வீரவணக்க நிகழ்ச்சியும், நெல்கட்டும்செவல் கிராமத்தில் செப். 1ஆம் தேதி பூலித்தேவன் 311-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்டம் முழுவதும் ஆக. 18 மாலை 6 மணி முதல் ஆக. 21 காலை 10 மணி வரையும், ஆக. 30 மாலை 6 மணி முதல் செப். 2 காலை 10 மணி வரையும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டம் பிரிவு 163 (1) மற்றும் (2)-இன் பிரகாரம் தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவா்கள் கூட்டமாகச் செல்லாமல் நான்கு நபா்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.