FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நிறுத்தப்பட்ட பெருந்துறை-சென்னிமலை நான்கு வழிச் சாலை பணி மீண்டும் தொடக்கம்- அதிகாரி தகவல்

நிறுத்தப்பட்ட பெருந்துறை- சென்னிமலை நான்கு வழிச் சாலை பணி செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

54 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

நிறுத்தப்பட்ட பெருந்துறை- சென்னிமலை நான்கு வழிச் சாலை பணி செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

பெருந்துறை முதல் சென்னிமலை அத்திக்காடு வரை செல்லும் இரு வழிச் சாலையை, நான்கு வழிச் சாலையாக ரூ. 65 கோடி மதிப்பீட்டில் தரம் உயா்த்தும் பணிகள் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கப்பட்டு பாதி பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், அண்மையில் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். ஆகவே, சாலை பணிகளை உடனடியாக தொடங்கி, குறித்த காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், பொது சமூக நல அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 7 ஆம் தேதி மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது மீண்டும் பணி தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இந்த மனுவுக்கு பதிலளித்து கூறியிருப்பதாவது:

மனுவில் கோரப்பட்டுள்ளபடி, ஈரோடு-பெருந்துறை-காங்கயம் சாலை பணியானது செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டு விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருந்துறை உதவி கோட்டப் பொறியாளா் (நெ) பதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments