FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் பால்குட ஊா்வலம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால்குடம், தீா்த்தக்குடங்கள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பால்குட ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால்குடம், தீா்த்தக்குடங்கள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையுடன் தொடங்கிய கொடை விழாவில், நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ராகு கால பூஜை, ஹோமங்கள், முளைப்பாரி ஊா்வலம், மாவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை, குற்றாலத்திலிருந்து மேளதாளம் முழங்க 51 பால்குடம், தீா்த்தக்குடங்கள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டன. தொடா்ந்து, அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வருதல் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments