அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்: அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தகவல்
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் 5 இடங்களில் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் 5 இடங்களில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை என்.கணேசராஜா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: அண்ணா பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை (செப். 15) திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து 5 இடங்களில் அண்ணாவின் 110 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
சனிக்கிழமை (செப். 15) செங்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலர் சுதா கே.பரமசிவன், மாநில பேச்சாளர் கே.சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள். அதேநாளில் சங்கரன்கோவிலில் நடைபெறும் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பனும், ஜெயலலிதா பேரவை இணைச் செயலருமான மா.இளங்கோவனும் பேசுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை (செப். 16) திருநெல்வேலியில் நடைபெறும் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமியும், மாநில பேச்சாளர் பீர்முகம்மதும் பேசுகிறார்கள்.
அதே நாளில் புளியங்குடியில் நடைபெறும் கூட்டத்தில் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரையும், மாநில பேச்சாளர் ஆர்.சிராஜுதீனும் பேசுகிறார்கள். இம் மாதம் 17ஆம் தேதி கடையநல்லூரில் நடைபெறும் கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் எம்.எஸ். பாண்டியனும், மாநில பேச்சாளர் நாஞ்சில் இ.ஞானதாஸும் பேசுகிறார்கள் என்றார் அவர்.
முன்னதாக அமமுக பாளையங்கோட்டை பகுதி மகளிரணி நிர்வாகி பாப்பாரத்தினம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். மாநில அமைப்புச் செயலர் சுதா கே.பரமசிவம், அவைத் தலைவர் பரணி கே.சங்கரலிங்கம், பாளையங்கோட்டை பகுதி துணைச் செயலர் அப்ரீன் பீர்முகம்மது, முத்துராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.