FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாடு மூத்த குடிமக்கள்  சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில்  நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில்  நடைபெற்றது.
 மாநிலத் தலைவர் சிவ.சோமநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.கணபதியப்பன் வரவேற்றார். பேராசிரியர் பத்மஜா அனந்தராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொருளாளர் கே.எஸ்.ஆறுமுகம், பி.சிவஞானம், ஆர்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் முதியோர் நலன் என்ற தலைப்பில் பேசினர்.
அக்டோபர் 1 ஆம் தேதி முதியோர் தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது. மத்திய அரசின் முதியோர் நலத்திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதியோர் குறைதீர்க் கூட்டம் நடத்த வேண்டும். முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைகளின் கோரிக்கை மனுக்களை விரைந்து பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.  இதில் திடியூர் சி.ஈஸ்வரமூர்த்தி மாவட்டத் தலைவராகவும், பி.பொன்னம்பெருமாள் மாவட்ட இணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments