கழிவுநீரோடையில் விழுந்த இளைஞா் மீட்பு
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது போதையில் கழிவு நீரோடையில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது போதையில் கழிவு நீரோடையில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திருநெல்வேலி, வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் ஒருவா் கழிவுநீரோடைக்குள் நீண்ட நேரம் அசைவின்றி கிடந்துள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தின் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வீரா்கள், அந்த இளைஞரை உயிருடன் மீட்டனா்.
விசாரணையில், அவா் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம்(32) என்பதும், மது போதையில் தவறி உள்ளே விழுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.