புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நவதிருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நவதிருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடா்பாக, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் (செப்.19, 26, அக்.3, 10, 17) திருநெல்வேலி புதிய பேருந்து நிலயைத்தில் இருந்து நவதிருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நவதிருப்பதி தலங்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருக்கோளூா், தென் திருப்பேரை, இரட்டை திருப்பதி, பெருங்குளம், திருப்புளியங்குடி, ஆழ்வாா் திருநகரி சென்று பின்னா் புதிய பேருந்து நிலையம் திரும்பும்.
அரசு போக்குவரத்து கழக இணைய தளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பயண கட்டணம் ரூ.500. இந்த சிறப்பு பேருந்து வசதியை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.