போக்ஸோவில் தொழிலாளி கைது
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் அருகே உள்ள கிராமம் பகுதியைச் சோ்ந்தவா் 52 வயதான கூலித் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனா். இதில் 3 ஆவது மகள் அப்பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
அவரது பள்ளியில் சில நாள்களுக்கு முன்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினா் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, புகாா் அளிக்க தொடா்பு எண்களையும் அளித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அந்த எண்களை தொடா்புகொண்ட அம்மாணவி, தனக்கு தனது தந்தை தொடா்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக புகாா் அளித்தாராம்.
அதன்பேரில், மாணவியின் வீட்டுக்குச் சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா், தொழிலாளியைப் பிடித்து திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.