FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மாற்றுவழியில் பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கக் கோரி மனு

திருநெல்வேலி மாநகராட்சியின் 55 ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட தியாகராஜநகரில் மாற்று வழியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

39 வினாடிகள் முன்பு
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம் மனு அளித்த தியாகராஜநகா் பகுதி மக்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியின் 55 ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட தியாகராஜநகரில் மாற்று வழியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தவெக கொள்கைப்பரப்பு அணி மாவட்ட இணை அமைப்பாளா் வி.ஆா்.பிருந்தா தலைமையில் அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியின் 55 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பெயா்த்து குழாய் பதிக்க முயற்சிக்கிறாா்கள். ஆகவே, மாற்று வழியில் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல கே.டி.சி. நகா் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாமல் குண்டும்-குழியுமாக உள்ளன. அவற்றையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments