முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்; நாற்காலி வீச்சு 

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் அதிகாரி வளசலன்  முன்னிலையில் தூத்துக்குடி சிட்டி டவர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 2 ஜூன் 2022, 6:23 pm IST
பகிர்:

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் அதிகாரி வளசலன்  முன்னிலையில் தூத்துக்குடி சிட்டி டவர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் பேசுகையில்,  காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசினால் மட்டும் போதாது, கட்சியை நாம் பலப்படுத்தவேண்டும் என்று பேசினார். 

Advertisement

Advertisement

அப்போது, மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா இருக்கையில் இருந்து எழுந்து தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நீங்கள் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள்? ஒரே வார்டில் திமுகவும் போட்டியிட்டது. காங்கிரசும் போட்டியிட்டது. இதை ஏன் நீங்கள் பேசி  முடிக்கவில்லை? இப்படி இருந்தால் எப்படி கட்சி பலப்படும்? என்று தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.

அப்போது மாநகராட்சி 34-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ் எழுந்து குறுக்கிட்டு பேச,  முத்துவிஜயா தரப்பிற்கும் ஏ.பி.சி.வீ. சண்முகம் ஆதரவாளரான சந்திரபோசுக்கும் இடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல், குழப்பம் தள்ளுமுள்ளானது.  

இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து முத்துவிஜயா கூட்ட அரங்கிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments