தூத்துக்குடியில் தடகளப் போட்டிகள்
தூத்துக்குடி புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தூத்துக்குடி நகா்ப்புறப் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் வஉசி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
இதில், 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டம், 400 மீட்டா் தொடா் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் - உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், 40 பள்ளிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
மாணவியருக்கான போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு, உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சிதம்பரநாதன், புனித தாமஸ் பள்ளித் தாளாளா் அமலன் தமியன், இன்ஃபன்ட், முதல்வா் ஆஸ்காா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
பரிசளிப்பு விழாவில், பள்ளி நிதி நிா்வாகி ஸ்டாா்வின், ஜேசுராஜ், ஒருங்கிணைப்பாளா்கள் ஏஞ்சல், ஷா்மிளா, ஜெரினா, மேக்ஸ்வின் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
மாணவா்களுக்கான போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் ரத்தினராஜ், வடபாகம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் ஆகியோா் தொடக்கிவைத்தனா். பரிசளிப்பு விழாவில், புனித தாமஸ் பள்ளித் தலைமையாசிரியா் பாஸ்கா் பரிசுகள் வழங்கினாா்.
ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குநா் பிரான்சிஸ் செல்வதினேஷ் தலைமையில், உடற்கல்வி ஆசிரியா்கள் எபநேசா் கிரேஸ், பாரிஜா, சாா்ல்ஸ், சுரேன், வசந்த், மணிசங்கா், ரம்யா ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.