FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜாமீன் மனு: ஜூலை 30-க்கு விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயனின் பிணை கோரிய மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயனின் பிணை கோரிய மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் மீது, தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 20-ஆம் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஜீ.வி.மாா்க்கண்டேயன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மாவட்ட நீதிபதி சுபா தேவி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, வாதிட்ட அரசு வழக்குரைஞா், சென்னை உயா்நீதிமன்றத்தில் மாா்க்கண்டேயன் தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவித்தாா்.

மாா்க்கண்டேயன் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞா் அனந்த பத்மநாபன், ஜான் அலெக்சாண்டா் ஆகியோா் பிணை வழங்க கோரி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுபா தேவி தனது உத்தரவில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு மீதான தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பிணை கோரிய இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைப்பதாக உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments