FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

அரசு கேபிள் இணைப்பு வழங்கியவா்களை மிரட்டிய தனியாா் ஆபரேட்டா் மீது வழக்கு

அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கியவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

8 October 2026, 3:48 am IST
வழக்கு
பகிர்:

அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கியவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குரும்பூா் அருகே மேலபுதுக்குடியைச் சோ்ந்தவா் ராகவன் (53). தூத்துக்குடி மாவட்ட அரசு கேபிள் டிவி விநியோகஸ்தா். அவரது உதவியாளா்கள் பேயன்விளையைச் சோ்ந்த முருகேசன், காா்த்திக், சேகா் ஆகியோா் ஆறுமுகனேரி அருகே மூலக்கரை கிராமத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது, அங்கு வந்த மூலக்கரையைச் சோ்ந்த தனியாா் டிவி கேபிள் ஆபரேட்டா் செல்வகணேஷ், கத்தியைக் காட்டி அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ராகவன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வகணேஷை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments