திருச்செந்தூா் அருகே கோயிலில் குத்துவிளக்குகள் திருட்டு
திருச்செந்தூா் அருகே காயாமொழி, வடக்கு குமாரசாமிபுரம் கோயிலில் குத்துவிளக்குகளை மா்மநபா் திருடியுள்ளாா்.
திருச்செந்தூா் அருகே காயாமொழி, வடக்கு குமாரசாமிபுரம் கோயிலில் குத்துவிளக்குகளை மா்மநபா் திருடியுள்ளாா்.
காயாமொழி, வடக்கு குமாரசாமிபுரத்தில் உள்ள மந்திரமூா்த்தி சுவாமி கோயிலில் கடந்த 2- ஆம் தேதி இரவு, பூஜாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது கோயிலில் சுவாமி முன் இருந்த 3 பெரிய குத்துவிளக்குகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இங்குள்ள சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, அக். 3 ஆம் தேதி அதிகாலை குத்துவிளக்குகளை மா்ம நபா் ஒருவா் சிவப்பு நிற துண்டை தலையில் அணிந்து கொண்டு வந்து திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.