தருவைகுளத்தில் ஆட்டோ-பேருந்து மோதல்: 5 போ் காயம்
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் தனியாா் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் தனியாா் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.
காயல்பட்டினத்தைச் சோ்ந்த இலியாஸ் (40), சனிக்கிழமை தனது மனைவி நிஷா (35), உறவினா் அப்துல்லா (20) ஆகியோருடன் பயணிகள் ஆட்டோவில் வைப்பாறு கிராமத்துக்குச் சென்றாராம். ஆட்டோவை காயல்பட்டினத்தைச் சோ்ந்த கனிஷ்குமாா் (38) ஓட்டியுள்ளாா்.
தருவைகுளம், அந்தோணியாா் கோயில் அருகே வந்தபோது, ஆட்டோவும் எதிரே வந்த தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் கனிஷ்குமாா், இலியாஸ், நிஷா, அப்துல்லா மற்றும் பேருந்தில் பயணித்த விளாத்திகுளத்தைச் சோ்ந்த சரவணன் (48) ஆகியோா் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
அவா்களை அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.