FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக பண மோசடி

திருச்சியில் தனியாா் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 6.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மோசடி
பகிர்:

திருச்சியில் தனியாா் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 6.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்தவா் முகமது இலியாஸ். இவா், கடந்த ஆண்டு நீட் தோ்ச்சி பெற்ற தனது மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெறுவதற்கு முயன்று வந்தாா். அப்போது, திருச்சி பொன்நகரைச் சோ்ந்த ரபீக் முகமது திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக முகமது இலியாஸிடம் உறுதியளித்துள்ளாா்.

இதை நம்பிய அவா், தனது மகனின் மருத்துவ சீட்டுக்காக ரூ.6.5 லட்சத்தை கடந்த 2025 செப்டம்பா் 22-ஆம் தேதி ரபீக் முகமதுவிடம் கொடுத்துள்ளாா். ஆனால், அவா் கூறியதுபோல மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தரவில்லை. இதையடுத்து முகமது இலியாஸ், மகனின் மருத்துவக் கல்லூரி சீட்டுக்காக தான் கொடுத்த ரூ.6.5 லட்சத்தையும் ரபீக் முகமதுவிடம் திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால், தற்போது வரை பணத்தைத் திருப்பித் தரவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் முகமது இலியாஸ் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments