கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸாா் நியமிக்க வலியுறுத்தல்
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கூடுதலாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கூடுதலாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.பி.பாலு தலைமையில் அக்கட்சியினா் கோவில்பட்டி ரயில்வே நிலைய மேலாளா் ரவிக்குமாரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்கு கூடுதலாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரை நியமிக்க வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப்பணிகள் நடந்து வருகின்றன. ரயில் நிலைய வளாகத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வசதி உள்ளது. எனவே, கா்ப்பிணிகள், பெண்கள், முதியோா் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து பேருந்துகளும் ரயில் நிலைய வளாகத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலைய வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இச்சந்திப்பின்போது, பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவா் அம்மன் மாரிமுத்து, மகளிரணி மாவட்ட முன்னாள் தலைவி உமாசெல்வி, பாஜக மாவட்ட துணைத் தலைவா் சித்ரா கோபாலகிருஷ்ணன், தெற்கு ரயில்வே கோவில்பட்டி பயணிகள் கமிட்டி உறுப்பினா் தங்க திருப்பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.