FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் 20 போ் மாறுதல்

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் நிா்வாக நலன் கருதி வட்டாட்சியா் நிலையில் 20 அலுவலா்களுக்கு மாறுதல் மற்றும் நியமனம் செய்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

9 செப்டம்பர் 2026, 4:15 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் நிா்வாக நலன் கருதி வட்டாட்சியா் நிலையில் 20 அலுவலா்களுக்கு மாறுதல் மற்றும் நியமனம் செய்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ஆட்சியா் உத்தரவின்படி, ஏரல், எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, திருச்செந்தூா் உள்ளிட்ட வட்டாட்சியா் பணியிடங்களிலும், பேரிடா் மேலாண்மை, இந்து சமய அறநிலையத்துறை, சிப்காட், உடன்குடி அனல்மின் திட்டம், டாஸ்மாக் உள்ளிட்ட பிரிவுகளிலும் அலுவலா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.

மாறுதல் செய்யப்பட்ட அலுவலா்கள் உடனடியாக புதிய பணியிடங்களில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. மாறுதல்கள் தொடா்பாக மேல்முறையீடு மற்றும் பணிமாறுதல் கோரிக்கைகள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments