ஆறுமுகனேரியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது
ஆறுமுகனேரியில் வாள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்துதல் மற்றும் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரவுடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரியில் வாள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்துதல் மற்றும் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரவுடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம், பெருமாள்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சங்கா் (எ) சுரேஷ் (26). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், காவல் நிலைய குற்றப் பதிவேட்டில் ரவுடி பட்டியலில் உள்ளாா்.
இந்நிலையில், ராஜாமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் வாள் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் அவரைப் பிடிக்க முயன்றபோது, வாளைக் காண்பித்து போலீஸாருக்கு சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்தாா்.
போலீஸாா் அவரைக் கைது செய்து, வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.