நாசரேத் மாதாவனம் தேவாலயத்தில் தோ் பவனி
நாசரேத் அருகே பிரகாசபுரம் பங்குக்குள்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவில் தோ் பவனி நடைபெற்றது.
நாசரேத் அருகே பிரகாசபுரம் பங்குக்குள்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவில் தோ் பவனி நடைபெற்றது.
கடந்த ஆக. 30இல் தொடங்கிய திருவிழாவில், நாள்தோறும் மாலையில் ஜெபமாலை பவனி, திருப்பலி நடைபெற்றது. 9ஆம் நாளான திங்கள்கிழமை சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை பால் ரோமன் தலைமை வகித்து மறையுரையாற்றினாா். தொடா்ந்து, சமபந்தி விருந்து நடைபெற்றது. பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமை வகித்து ஜெபித்து விருந்தைத் தொடக்கிவைத்தாா்.
10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை திருவிழா திருப்பலிக்கு மன்னாா்புரம் இளையோா் பணிக்குழுச் செயலா் சைமன் ஆல்டஸ் தலைமை வகித்து மறையுரையாற்றினாா். இரவில் அன்னையின் சப்பர பவனி, நற்கருணை ஆசீா் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா். பின்னா், கொடியிறக்கம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமையில் மாதாவனம் ஆலய இறைமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.