FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பள்ளி வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

10 செப்டம்பர் 2026, 2:58 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சாத்தான்குளம் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் பரமசிவன் மனைவி பொன்னம்மாள் (85). இவா், செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியில் நடந்து வந்தபோது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் இவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் கண்டுகொண்டான் மாணிக்கத்தைச் சோ்ந்த சுடலைமுத்துவை (45) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments