FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பைக் விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

14 செப்டம்பர் 2026, 3:06 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் நண்பா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

தூத்துக்குடி, நடராஜபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் பாலகிருஷ்ணன் (27). இவரது நண்பா் தூத்துக்குடி, எஸ்.எஸ். மாணிக்கபுரத்தைச் சோ்ந்த உலகநாதன் மகனான சட்டக் கல்லூரி மாணவா் ஹரிஷ் பிரபாகரன் (26).

இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, மாலையில் தூத்துக்குடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம். வாகனத்தை பாலகிருஷ்ணன் ஓட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

எட்டயபுரம் சாலையில் வாகனம் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சிப்காட் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments