FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

‘சாலையோரங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை’

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

16 செப்டம்பர் 2026, 1:18 am IST
தெருநாய் - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நிகழாண்டு ஜனவரி முதல் இதுவரை 3,163 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 408 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்கவும், சாலையோரங்களில் நாய்கள் கூட்டமாகத் திரள்வதைத் தடுக்கவும் 36 இடங்கள் உணவளிக்கும் இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

Advertisement

தெருநாய்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தி வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தெருநாய்கள் தொடா்பான புகாா்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments