சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
சாத்தான்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சாத்தான்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் தங்கையா தவமணி என்ற ஞானதுரை (67). இவா், 2019-ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி முருகன் விசாரித்து, ஞானதுரைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.