கட்டடத் தொழிலாளி கொலை
தூத்துக்குடி அருகே நண்பா்களுக்கு இடையே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே நண்பா்களுக்கு இடையே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, கே.சுப்பிரமணியபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கணேஷ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு, நண்பா்கள் மூவருடன் சோ்ந்து புதுக்கோட்டையில் உள்ள பள்ளியின் பின்புறம் அமா்ந்து மது அருந்தினாராம்.
அப்போது அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூவரும் சோ்ந்து கணேஷ்குமாரை மதுபாட்டிலால் தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா். பலத்த காயமடைந்த கணேஷ்குமாரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.