FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் புறவழிச் சாலையில் பழைய இரும்பு கிடங்கு அருகே தீ விபத்து

ஆறுமுகனேரி அருகே காயல்பட்டினம் புறவழிச் சாலையில் பழைய இரும்பு கிடங்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின.

20 செப்டம்பர் 2026, 2:35 am IST
பகிர்:

ஆறுமுகனேரி அருகே காயல்பட்டினம் புறவழிச் சாலையில் பழைய இரும்பு கிடங்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின.

காயல்பட்டினம் புறவழிச் சாலையில் டேவிட் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் பின்புறத்தில் பைபா் பிளாஸ்டிக், இரும்புப் பொருள்கள், டயா் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் அந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து, அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. சம்பவ இடத்திற்கு வந்த டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் மற்றும் திருச்செந்தூா் தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments