நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞா் கைது
கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி, கமலா நேரு காலனியைச் சோ்ந்த கோபால் மகன் சஞ்சை குமாா் (22). இவா் மீது கஞ்சா உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி கஞ்சா வழக்கில் திருச்செந்தூா் நீதிமன்றம் இவருக்கு பிடி ஆணை பிறப்பித்தது.
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி மற்றொரு வழக்கிலும் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, சஞ்சை குமாரை ஆறுமுகனேரி போலீஸாா் தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவா் பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம், தனிப்படை காவலா் சண்முகம் ஆகியோா் அங்கு சென்று அவரைக் கைது செய்து, திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.