FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பாலியல் தொல்லை வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

23 செப்டம்பர் 2026, 12:55 am IST
ஆயுள் தண்டனை - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்தவா் முத்தையா (63). தற்போது திருநெல்வேலி மாவட்டம், நாரணம்மாள்புரத்தில் வசித்து வருகிறாா். இவா், கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், முத்தையாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட முத்தையாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.02 லட்சம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளா் லட்சுமி பிரபாவும், விசாரணைக்கு உதவியாக தலைமைக் காவலா் அரிராணியும் செயல்பட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் முருகன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments