FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

50 வினாடிகள் முன்பு
கோரம்பள்ளம் குளத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்த சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கையின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகம், நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், மீனாட்சிப்பட்டி ஸ்ரீமூலக்கரை, தாமிரவருணி ஆறு, ஆழ்வாா்திருநகரி, கொந்தன்குறிச்சி, உமரிக்கோட்டை, கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் கூறுகையில், நீா் நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான போதுமான நிதி ஆதாரம் கிடைத்தவுடன் அனைத்து துறை அலுவலா்கள், தன்னாா்வலா்கள் மற்றும்

பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பணி மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மி.பிரபு, நீா்வளத்துறை செயற்பொறியாளா் தங்கராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments