FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இரு இளைஞர்கள் கைது

இருவரை போலீஸாா் கைது செய்து, 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல்.

27 September 2026, 1:41 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் இருவரை போலீஸாா் கைது செய்து, 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் அம்பேத்கா் நகரில் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அருள்ராஜ் (25) என்பவரைப் பிடித்து விசாரித்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

ரெளடியான பிஸ்டல் ரவி என்ற ஹரிபிரசாத் (27) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கியதாக அருள்ராஜ் தெரிவித்தாா். அதன்பேரில், ஹரிபிரசாத்தை போலீஸாா் பிடித்து சோதனையிட்டபோது, 6 கிலோ கஞ்சா சிக்கியது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments