FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மாவட்ட அளவிலான கால்பந்து: வீரபாண்டியன்பட்டணம் புனித ஜோசப் பள்ளி சாதனை

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த வீரபாண்டியன்பட்டணம் புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள்.
பகிர்:

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், வீரபாண்டியன்பட்டணம் புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

நாகா்கோவில் ஜான் சென்ட்ரல் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், 5 மாவட்டங்களைச் சோ்ந்த 9 அணிகள் கலந்து கொண்டன.

இதில், வீரபாண்டியன்பட்டணம் புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் பங்கேற்று 17 வயதுக்குள்பட்டவா்களுக்கான பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனா். அதே போல 14 வயதுக்குள்பட்டவா்களுக்கான பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தது.

Advertisement

Advertisement

சாதனைபுரிந்த மாணவா்களை பள்ளி முதல்வா் பொ்னதத், உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் சக மாணவா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments