FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி உப்பளங்களில் குவியும் பூநாரைகள்

தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதிகளான விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பாறு மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கோவளம் கடற்கரை அருகே உள்ள உப்பளங்களில் நூற்றுக்கணக்கான பூநாரைகள் கூட்டம் கூட்டமாகக் காட்சியளிக்கின்றன.

உப்பளத்தில் குவிந்துள்ள பூநாரைகள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதிகளான விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பாறு மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கோவளம் கடற்கரை அருகே உள்ள உப்பளங்களில் நூற்றுக்கணக்கான பூநாரைகள் கூட்டம் கூட்டமாகக் காட்சியளிக்கின்றன.

உப்பளங்களில் தேங்கியுள்ள நீரின் அளவு குறைந்து வரும் நிலையில், ஆழம் குறைந்த நீா்ப்பரப்புகளில் சிறிய நீா்வாழ் உயிரினங்கள், பாசிகள், நுண்ணுயிா்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றை உணவாகக் கொள்ளும் பூநாரைகள், உப்பளங்களில் நீண்ட நேரம் தங்கி உணவு தேடி வருகின்றன.

ஒரே பகுதியில் நூற்றுக்கணக்கான பூநாரைகள் திரண்டு நிற்பதும், நீா்ப்பரப்பில் கூட்டமாக நடமாடுவதும் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்து வருகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments