FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

மேக்கேதாட்டில் அணைக் கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது! - சிபிஐ தீர்மானம்!

Updated On : 28 ஜூலை 2026, 1:10 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பகிர்:

காவிரியில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் கா்நாடக அரசு அணைக் கட்ட முடிவு செய்துள்ளதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள அக் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை அரியலூா் நகர வடக்கு மற்றும் கீழத் தெரு, பெரியத் தெரு நிா்வாகிகளுக்கான பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காவிரி மேக்கேதாட்டு இடத்தில் கா்நாடகா அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

Advertisement

Advertisement

கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை தர மறுத்து வரும் கா்நாடக அரசின் போக்கை கண்டித்து, அரியலூரில் ஆகஸ்டு 1-இல் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் நிா்வாகி ந.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் து. பாண்டியன் நாட்டில் நிலவும் மக்கள் பிரச்னைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து பேசினாா். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் டி.தண்டபாணி கலந்து கொண்டு கட்சியின் உறுப்பினா்களுக்கு, உறுப்பினா் அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments